பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி அடைந்த அதிபர் மக்ரோனின் அணி:

பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மக்ரோனின் என் மார்ச் கட்சி வெற்றி பெற்றது.

பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஜூன் மாதம் 11-ம் தேதி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற வாக்குப்பதிவின் முதல் சுற்று முடிவில், அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் முன்னிலை வகித்து வந்தார்.

இந்த நிலையில் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் மொத்தமுள்ள 577 தொகுதிகளில் மக்ரோனின் கட்சி 300 இடங்களை கைப்பற்றி மகத்தான வெற்றி பெற்றுள்ளது.

இந்தத் தேர்தலில் பிரான்சின் இடதுசாரி மற்றும் வலதுசாரி கட்சிகள் தோல்வியைத் தழுவின. கடந்த ஏப்ரல் மாதம் நடத்த பிரான்ஸ் அதிபர் தேர்தலில் இம்மானுவேல் மக்ரோன் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts