விண்டோஸ் 10 பயன்படுத்தும் ஆண்ட்ராய்ட் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தி

விண்டோஸ் 10 பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தங்களுடைய மொபைலில் தற்போது மிஸ்டு கால் வசதி, இன்கமிங் மெசேஜ் நோட்டிபிகேசன் வசதி, பேட்டரி குறைவாக இருந்தால் அலர்ட் செய்யும் நோட்டிபிகேசன் வசதி ஆகியவற்றை பெற்றுக்கொள்ளலாம்.


இந்த வசதி ஆண்ட்ராய்ட் போன் வாடிக்கையாளர்களுக்கு மிக உதவிகரமாக இருக்கும்.

மேலும் இவ்வாறு வரும் அழைப்புகளை நீங்கள் அட்டெண்ட் செய்யாமல் தவிர்க்கவும் வசதி உண்டு. இந்த வசதியை எனேபிள் செய்ய நீங்கள் கீழ்க்கண்ட வழிமுறைகளை செய்ய வேண்டும்

* உங்களுடைய ஆண்ட்ராய்டு மொபைல் போனில் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து கோர்ட்டானா (Cortana) செயலியை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்யுங்கள்

*இன்ஸ்டால் செய்தவுடன் செயலியை ஓப்பன் செய்து செட்டிங்கை க்ளிக் செய்து கோர்ட்டானா செட்டிங் செல்லுங்கள்

* இதில் இருக்கும் மிஸ்ட் கால் நோட்டிபிகேசன், இன்கமிங்க் மெசேஜ் நோட்டிபிகேசன், இன்கமிங் கால் நோட்டிபிகேசன், லோ பேட்டரி நோட்டிபிகேசன் ஆகியவற்றை டர்ன் ஆன் செய்யுங்கள்ல்

*பின்னர் உங்கள் விண்டோஸ் கம்ப்யூட்டரில் கோர்ட்டான சரியான முறையில் செயல்படுகிறதா என்பதை Settings app > Cortana > Notifications சென்று சரிபார்த்து கொள்ளுங்கள்

*தற்போது இரு உபகரணங்களுக்குமான நோட்டிபிகேசனை டர்ன் ஆன் செய்யுங்கள்


Related Posts