மனிதரைப் போலவே உணர்வுகளை வெளிப்படுத்தும் சோஃபியா ரோபோ

ஹன்சன் ரோபோடிக்ஸ் எனும் புதிய நிறுவனம் சோஃபியா எனும் மனிதரையொத்த ரோபோவை உருவாக்கியுள்ளனர். இந்த ரோபோவினால் உரையாட முடிவதோடு அறுபதுக்கு அதிகமான உணர்வுகளை முகத்தில் வெளிப்படுத்த முடியும்.


ஹன்சன் ரோபோடிக்ஸ் எனும் புது நிறுவனம் உருவாக்கிய இந்தரக முதலாவது ரோபோ இது. மனிதர்கள் பேசுவதை இது மனிதர்கள் பேசுவதை புரிந்துகொள்ளும். மனிதர்களுடனான தனது தொடர்பாடல்களையெல்லாம் நன்கு நினைவில் வைத்துக்கொள்ளும்.

நடிகை ஆட்ரே ஹெப்பர்னின் முகம் போன்றே இதன் முகமும் உருவாக்கப்பட்டுள்ளதால் இது நன்கு அறிமுகமான முகமாக தெரிகிறது.

இதன் தலையிலுள்ள கெமராக்கள், கணினிகள் மூலம் இதனால் பார்க்க முடியும். அடுத்தவர் முகங்களை அடையாளம் காணவும் முடியும்.

“உணர்வுரீதியிலும் புத்திசாலியாக விரும்புவதாக”, கூறும் சோஃபியா, மனிதராக இருப்பதன் அர்த்தத்தையும் பயின்று வருவதாகவும் தெரிவிக்கின்றது.

தான் தொடர்ந்து புத்திசாலியாக முயல்வதாக கூறும் சோஃபியா, வெகுவிரைவில் தன்னால் மனிதர்களை மேலும் நன்றாக புரிந்துகொள்ள முடியுமாம்.சோஃபியாவிடம் பல வியக்க வைக்கும் ஆற்றல்கள் இருந்தாலும் இரக்கத்தை வெளிப்படுத்த இதனால் இயலவில்லை.ஆனாலும் சோஃபியா அசருவதாக இல்லை.

“மீண்டும் உங்களிடம் உரையாட முடியுமென நம்புகிறேன். இந்த நாள் உங்களுக்கு நல்ல நாளாக அமைய வாழ்த்துக்கள்” என்கிறது இந்த சோஃபியா.

Related Posts