டைப் செய்யாமல் டெக்ஸ்ட் செய்வது எவ்வாறு( Android பயனாளர்களுக்கு மட்டும்)

இன்றைய கால கட்டத்திலே வாகனங்களில் கையடக்கத் தொலைபேசி பாவிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். அவ்வாறான கவலையை போக்கவே ஆண்ட்ராய்டில் ஸ்பீச் டூ டெக்ஸ்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்த வசதியை கொண்டு ஸ்மார்ட்போனில் பேசினாலே டெக்ஸ்ட் டைப் செய்யப்படும்.


உங்களது ஸ்மார்ட்போனில் ஸ்பீச் டூ டெக்ஸ்ட் வசதியை இயக்குவது எப்படி என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
* உங்களது ஸ்மார்ட்போனில் டைப் செய்ய வேண்டிய ஆப்ஷனில் கீபோர்டு செயலியை ஓபன் செய்ய வேண்டும்.
* இனி கீபோர்டின் ஓரத்தில் காணப்படும் மைக்ரோபோன் பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
* இனி ஸ்பீக் நௌ (Speak Now) ஆப்ஷன் தெரிந்ததும், நீங்கள் டைப் செய்ய வேண்டியவற்றை பேச துவங்கலாம்.
* அடுத்து சிறப்பு குறியீடுகளை டைப் செய்ய வேண்டுமெனில், அதற்கேற்ற வார்த்தைகளை கூற வேண்டும்.
* புதிய பத்தியை துவங்க அதற்கேற்ற கட்டளையை கூற வேண்டும்.

Related Posts