10ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு தொடரூந்திலிருந்து தூக்கி வீசப்பட்ட சம

இந்தியா, பீகாரில் ஓடும் தொடரூந்தில் இருந்து 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவி 06 பேர் கொண்ட நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தொடரூந்தில் இருந்து வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்றப்படுத்தியுள்ளது, 


உயிருக்கு ஆபத்தான நிலையில் சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார், அந்த பெண் கடந்த வியாழக்கிழமை இரவு லக்கிசராய் மாவட்டத்தில் லாகசாக் கிராமத்தில் இருந்து 06 பேர் கொண்ட கும்பலால் தூக்கி வரப்பட்டு தொடரூந்தில் வைத்து பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
பின்னர் அதிகாலையில் அந்த பெண் தொடரூந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டுள்ளார், ஆபத்தான நிலையில் கிடந்த அவரை அந்த மக்கள் மீட்டு போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர், பின்னர் அந்த பெண்ணை சிகிச்சைக்காக பாட்னா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் வைத்துள்ளனர், சிறுமியின் உடல் நிலை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், சிறுமியின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து அந்த பெண் அளித்த தகவலின்படி இந்த கொடூர செயலில் ஈடுபட்ட ஒரு சிலரை போலீசார் கைதுசெய்து விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.இதுகுறித்து இந்த கொடூர செயலில் ஈடுப்பட நபர்களுக்கு தக்க தண்டனை வழங்கப்படும் என பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கூறியுள்ளார்.

Related Posts