அங்கொட லொக்கா மற்றும் லடியாவை கைது செய்ய இண்டர்போல் பொலிசாரிடம் உதவி கோருகிறது இலங்கை

களுத்துறை சிறைச்சாலை பேருந்து மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம் தொடர்பிலான சந்தேக நபர்கள் இருவரை கைது செய்ய இன்டர்போல் பொலிசாரின் உதவி கோரப்பட்டுள்ளாதாக பொலிசார் தெரிவித்தனர்.

பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அங்கொட லொக்கா மற்றும் லடியா என அழைக்;கப்படும் இருவரையே கைது செய்ய பொலிசார் சர்வதேச பொலிசாரின் உதவியை நாடியுள்ளனர்.

களுத்துறை சிறைச்சாலை பேருந்து மீது மேற்கொள்ளப்பட்;ட துப்பாக்கி பிரயோகத்தில் நிழல் உலக தலைவர் என அழைக்கப்படும் சமயங் உள்ளிட்ட சிறைக்கைதிகள் ஐவர் உயிரிழந்ததோடு சிறைச்சாலை அதிகாரிகள் இருவரும் உயிரிழந்தனர்.

குறித்த தாக்குதல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து அங்கொட லொக்கா மற்றும் லடியா ஆகியோர் தொடர்புபட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது.

எனினும் குறித்த நபர்கள் நாட்டை விட்டு தப்பிச்சென்றுள்ள நிலையில்  அவர்களை கைது செய்ய பொலிசார் சர்வதேச பொலிசாரின் உதவியை நாடியுள்ளனர்.

Related Posts